
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது அடுத்து ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது இந்திய அணி வீரர்கள் தயாராகி வரும் வேளையில் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ள காரணம் காரணமாக அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அல்லது மாயங்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது ப்ரித்வி ஷாவை இங்கிலாந்துக்கு அழைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரே ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக இறங்குவார் என்றும் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிசிசிஐயின் இந்த முடிவை கடுமையாக கடிந்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ் கூறுகையில் : இந்திய அணியில் புதிய வீரர்களை தற்போதைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அழைத்தால் அது ஏற்கனவே அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தும்.

அணியில் இருக்கும் வீரர்களுக்கு முதலில் மதிப்புத் தர வேண்டும். அதன் பின்னரே புதிய வீரரை இணைக்கும் யோசனையை எடுக்க வேண்டும். ஏனெனில் ராகுல் அகர்வால் ஆகிய துவக்க வீரர்கள் அணியில் இருக்கும் போது புதிதாக ஒருவரை தேர்வு செய்து தேர்வு செய்வது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய கபில்தேவ் :
இந்த திட்டம் எனக்கு சரியாக தெரியவில்லை. புதிய வீரர்களை தேர்வு செய்வதன் மூலம் தற்போது அணியிலிருக்கும் வீரர்களை அசிங்கப்படுத்துவது போன்று தான் எனக்கு தெரிகிறது எனவே இந்த இந்தத் திட்டத்திற்கு அணியின் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கபில்தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டீம்ல புதுசா ஒருத்தர சேக்குறோம்னு இருக்கும் வீரர்களை அசிங்கப்படுத்தாதீங்க – கொதித்தெழுந்த கபில்தேவ் appeared first on Cric Tamil.
from Cric Tamil https://ift.tt/3hr1kJS
via 
IFTTT
 
Comments
Post a Comment