நடராஜன் – யோகி பாபு சந்திப்பு நடைபெற இதுதான் காரணமாம். அவர்களுக்குள் இப்படி ஒரு உறவா ?

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சேலத்தை சேர்ந்த நடராஜன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட பின்னர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே விலகி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகிவரும் நடராஜன் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nattu

அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அடுத்து வரும் t20 உலகக்கோப்பை தொடரில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போது காயத்திற்கான அறுவை சிகிச்சை முடித்துக்கொண்ட நடராஜன் காமெடி நடிகரான யோகி பாபுவை சந்தித்து பேசிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இப்படி அவர்கள் இருவரும் சந்தித்து அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உணவகம் ஒன்றில் சந்தித்துக்கொண்ட நடராஜன் மற்றும் யோகிபாபு ஆகியோர் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொண்டது மட்டுமின்றி சில மணிநேரங்களை ஒன்றாகவே கழித்தனர். மேலும் அந்த சந்திப்பின்போது யோகிபாபுவுக்கு முருகன் சிலை ஒன்றையும் நடராஜன் அன்பு பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான நாள். எப்போதும் அன்பாகவும் கலகலப்பாகவும் இருக்கக்கூடிய ஒரு நண்பர் யோகி பாபுவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நடராஜனும் யோகி பாபுவும் நல்ல நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

nattu 1

மேலும் சமீபத்தில் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தை கிரிக்கெட் வீரர் கோஸ்வாமி பாராட்டியிருந்த நிலையில் யோகி பாபு தனது நண்பர்தான் என்று கூறி கோஸ்வாமியை யோகிபாபு உடன் வீடியோ கால் பேச வைத்துள்ளார் நடராஜன். இந்த சந்திப்பின் மூலம் நடராஜன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நல்ல நண்பர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நடராஜன் – யோகி பாபு சந்திப்பு நடைபெற இதுதான் காரணமாம். அவர்களுக்குள் இப்படி ஒரு உறவா ? appeared first on Cric Tamil.



from Cric Tamil https://ift.tt/2UnwH0n
via IFTTT

Comments