புற்றுநோயால் அவதிப்படும் 8 வயது சிறுமி. தனது டீஷர்ட்டை ஏலம் விட்டு நெகிழ்வைத்த நியூசி வீரர் – விவரம் இதோ

சமீபத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்து வர மற்றொரு பக்கம் தனது நெகிழ்ச்சியான செயலின் மூலம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி.

taylor-1

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய டிம் சவுதி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

இந்நிலையில் தற்போது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு 8 வயது சிறுமி கோழி என்பவர் அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தனது குடும்பத்தாரின் மூலம் அறிந்த டிம் சவுதி தற்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்காக தான் பயன்படுத்திய ஜெர்சி ஒன்றினை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

Southee 1

அதன்படிதான் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களின் கையொப்பங்களையும் பெற்று தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர் நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் ஆட்டோகிராஃப் போட்டுள்ள ஜெர்சியை நான் ஏலத்திற்கு விடப் போகிறேன் என்றும் இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அந்த எட்டு வயது சிறுமியான ஹோலியின் மருத்துவ சிகிச்சைக்கு வழங்க உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

southee 2

மேலும் ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம் அதுமட்டுமின்றி நேரடியாக உதவ விரும்புபவர்கள் வங்கி கணக்கின் மூலம் உதவி செய்யலாம் என்று டிம் சவுத்தி அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post புற்றுநோயால் அவதிப்படும் 8 வயது சிறுமி. தனது டீஷர்ட்டை ஏலம் விட்டு நெகிழ்வைத்த நியூசி வீரர் – விவரம் இதோ appeared first on Cric Tamil.



from Cric Tamil https://ift.tt/2TbLsmJ
via IFTTT

Comments