
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோத உள்ளது. இதற்கு முன்னர் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன்பின்னர் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதில்லை.

இந்நிலையில் தற்போது இந்த தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது நம்பிக்கையை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் இன்று தொடர் குறித்த தனது கருத்தினை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என இங்கிலாந்து நிர்வாகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதன் காரணமாக இங்கிலாந்து தோல்வி அடைந்ததாக சில கருத்துக்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் அமைக்கப்பட்டது போல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம்களை அங்கு உருவாக்குவார்கள் என்ற எண்ணம் என்னிடம் உள்ளது. இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மேலும் நமது அணியில் முன்பைவிட தற்போது வேகப்பந்து வீச்சை கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. அணியில் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசி வருவதால் நிச்சயம் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்தாலும் இந்திய அணி அங்கு தங்களது வெற்றியை நிலை நாட்ட அதிக வாய்ப்பு உள்ளது என கவஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்திய அணியை வீழ்த்த இங்கிலாந்து வைத்திருக்கும் பிளான். அதுவும் இந்தியாவுக்கு பிளஸ் தான் – கவாஸ்கர் உறுதி appeared first on Cric Tamil.
from Cric Tamil https://ift.tt/3fBwqit
via
IFTTT
Comments
Post a Comment