
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து பயணிக்க உள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணிக்கு புதிதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ள அக்சர் பட்டேல் இந்த தொடர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அக்சர் பட்டேல் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது : இந்தியாவில் விளையாடும்போது ஸ்பின்னர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவார்கள்.
ஆனால் நாம் வெளிநாடு சென்று ஆடும்போது அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஸ்பின்னர்களுக்கு மைதானம் அவ்வளவாக உதவாது. இருப்பினும் நமது அணியில் உள்ள குவாலிட்டியான ஸ்பின்னர்கள் நமது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பலம் ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக ஓவர்களை வீசி விட்டு ஓய்வு தேவைப்படும் போது இந்திய அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்துவார்கள்.

மேலும் எதிர் அணியை அவர்கள் ரன் குவிக்க விடாமல் பந்து வீசுவதால் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏற்படும். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது எளிதானது கிடையாது. இங்கிலாந்து போன்ற மைதானங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக மைதானத்தின் தன்மையை அறிந்து கொண்டு பந்துவீசுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் :

இந்திய அணியின் தற்போதைய சுழற்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக உள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கு ஸ்பின்னர்கள் பெரிய பலமாக அமைவார்கள் என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பந்துவீசுவது மட்டுமின்றி 8 முதல் 9 ஆவது இடம் வரை பேட்டிங் வரிசை இருக்கும் பொழுது எந்த ஒரு அணியையும் இந்திய அணி வீழ்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டா இருக்கப்போறது இதுதான் – அக்சர் படேல் பேட்டி appeared first on Cric Tamil.
from Cric Tamil https://ift.tt/3c5TQKF
via
IFTTT
Comments
Post a Comment