
கொரனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, காரவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தையும் வருகிற செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்தும் முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ. இந்த ஐபிஎல் தொடரில் இந்திய ஆடுகளங்களில் சொதப்பிய ஐந்து பேட்ஸ்மேன்கள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல்லின் இரண்டவது பாதியில் தங்களது திறமையை மீண்டும் நிரூபிப்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கீழே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ள ஐந்து வீரர்களும், ஐக்கிய அமீரகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலேயே தங்களது திறமையை நிரூபித்து காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயாங்க் அகர்வால்:
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான இவர், இந்த சீசனில் தன்னுடைய பழைய ஃபார்மை தொடர முடியாமல் தவித்து வந்தார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடியுள்ள அவர், இந்தியாவில் விட்ட தன்னுடைய பழைய ஃபார்மை ஐக்கிய அமீரகத்தில் மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அங்கு கடந்த சீசனில் 156 என்ற அதிவேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் 424 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார்.

குயின்டன் டீகாக்:
இந்த ஆண்டு தன்னுடைய மோசமான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு சென்ற குயின்டன் டீ காக், ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற சென்ற சீசனில் 16 போட்டிகளில் 503 ரன்களை அடித்து அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கியிருந்தார். எஞ்சிய போட்டிகள் அவருக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெற இருப்பதால், அந்த அணியின் நம்பிக்கையைப் பெற நிச்சயமாக மீண்டும் அவரின் அதிரடியை வெளிக்காட்டுவார்.

நிக்கோலஸ் பூரன்:
சென்ற சீசனில் 14 இன்னிங்சுகளில் 353 ரன்கள் அடித்த இவரின் ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 170 ஆக இருந்தது. கடந்த ஆண்டு பஞ்சாப் அணியின் சிறந்த பினிஷராக இருந்த இவர், பாதியில் நிறுத்தப்பட்ட இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் நான்கு முறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபிக்க அவருக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதால், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இஷான் கிஷன்:
ஐக்கிய அமீரகத்தில் கடந்த ஆண்டு தனது முழு திறனையும் வெளிப்படுத்திய இஷான் கிஷனுக்கு, இந்த ஆண்டு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் இவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதால், சில போட்டிகளுக்குப் பின்பு மும்பை அணியில் இருந்து வெளியே அமர வைக்கப்பட்டார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற சென்ற ஆண்டு தொடரில் 13 இன்னிங்சுகளில் 516 ரன்கள் அடித்துள்ள இவரின்மேல் நம்பிக்கைவைத்து, மும்பை அணி மீண்டும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

தேவ்தத் படிக்கல்:
ஐக்கிய அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், மற்ற அனைத்து வீரர்களை விடவும் தேவ்தத் படிக்கல்லுக்கு தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கும். சென்ற ஆண்டு அங்கு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய இவர், அந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 473 அடித்து அசத்தியிருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது கொரனாவிலிருந்து மீண்டு வந்த அவரிடம் பழைய நிலையான ஆட்டம் இல்லாமல் இருந்தது. அவர் அதை மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் வெளிக்காட்டுவார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
The post யு.ஏ.இ மைதானங்களில் கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த 5 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ appeared first on Cric Tamil.
from Cric Tamil https://ift.tt/3uDXCkS
via
IFTTT
Comments
Post a Comment