
ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பதால் அவர்களுக்கு இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில் தொடர் தோல்விகளால் துவண்டு புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள பஞ்சாப் அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப காத்திருக்கிறது இதனால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன்னர் போடப்பட்ட டாசிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி அணியில் ஒரு மாற்றத்தையும் செய்துள்ளதாக அவர் கூறினார். அந்த மாற்றம் யாதெனில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரை அணியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக சபாஷ் அகமதுவை அணியில் இணைத்துள்ளார்.

விராட் கோலியின் இந்த மாற்றம் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய டி20 அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளங்கிவரும் சுந்தரை ஏன் பெங்களூர் அணியில் இருந்து நீக்க வேண்டும் ? அவருக்கு பதிலாக இவருக்கு ஏன் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது போலவும் தங்களது கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
The post பெங்களூரு அணியில் இருந்து தமிழக வீரரை வெளியேற்றிய விராட் கோலி – ஏன் இந்த மாற்றம் ரசிகர்கள் கொதிப்பு appeared first on Cric Tamil.
from Cric Tamil https://ift.tt/2QM4leH
via
IFTTT
Comments
Post a Comment