இதுக்காகவே இந்த வீரரை தயார் செய்தோம். அவரே பெங்களூரு அணியை வீழ்த்த காரணம் – ராகுல் பெருமிதம்

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. கோலி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

gayle

அதேபோன்று கெயில் 46 ரன்களும், இறுதிநேரத்தில் ஹர்ப்ரீட் 25 ரன்களும் அடிக்க பஞ்சாப் அணி 179 ரன்கள் குவித்தது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் என்ற சவாலான இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. துவக்கவீரரான படிக்கல் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் கோலியுடன் சேர்ந்த படித்தார் நன்றாக விளையாடினாலும் அவர்களால் ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை.

அப்படி ஒரு இக்கட்டான வேளையில் கோலி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறிய அதற்கடுத்து அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து டிவில்லியர்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க அங்கேயே பெங்களூரு அணியின் தோல்வி உறுதியானது. பின்னர் இறுதிவரை விளையாடிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் :

harpreet 1

இந்த தொடரில் நாங்கள் இதுபோன்ற மைதானத்திற்காகவே நாங்கள் ஹர்ப்ரீட் பிராரை தயார் செய்து வந்தோம்/ இதுபோன்ற மைதானங்களில் அவர் தனது பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு முதலில் சில போட்டிகளில் வாய்ப்பு கொடுக்காமல் தயார் செய்து வந்த நிலையில் தற்போது இந்த மைதானத்திற்கு ஒரு பிங்கர் ஸ்பின்னர் சரியான லென்த்தில் வீச வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு அவரை நாங்கள் இன்று அணியில் எடுத்தோம்.

brar

அதே போன்று அவர் பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சிறப்பாக செயல்பட்டார் அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது இறுதி நேரத்தில் என்னுடன் கைகோர்த்து அவர் பேட்டிங்கில் 25 ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி எங்கள் அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.

The post இதுக்காகவே இந்த வீரரை தயார் செய்தோம். அவரே பெங்களூரு அணியை வீழ்த்த காரணம் – ராகுல் பெருமிதம் appeared first on Cric Tamil.



from Cric Tamil https://ift.tt/2QIYyX6
via IFTTT

Comments