பஞ்சாப் அணிக்கெதிராக நாங்க பெற்ற இந்த தோல்விக்கு அந்த ஒரு மோசமான ஓவர்தான் காரணம் – விராட் கோலி வேதனை

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

rahul

அதன்படி பஞ்சாப் அணி தற்போது முதல் இன்னிங்சை விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து அவர்கள் 179 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்று அதிரடியாக விளையாடிய கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

அதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் அடித்து மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக கோலி 35 ரன்களும், படிதார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் 31 ரன்கள் குவித்தனர். பஞ்சாப் அணி சார்பாக ஹர்ப்ரீட் பிரார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

harpreet 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : பஞ்சாப் அணி இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக துவங்கி இருந்தார்கள். இருப்பினும் நாங்கள் 5 விக்கெட்டுகளை எடுத்து அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஒரு கட்டத்தில் 90 ரன்களுக்கு ஒரு விக்கெட்டில் இருந்தவர்களை 116 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வரை கொண்டு வந்தோம்.

ஆனால் இறுதி நேரத்தில் 25 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். 160 ரன்கள் எடுத்திருந்தால் சேசிங் செய்ய எளிதாக இருந்திருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் பல மோசமான பந்துகளை நாங்கள் பவுண்டரிக்கு விட்டுவிட்டோம். இந்த 25 ரன்கள் வரை அதிகமாக கொடுத்தது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எங்கள் ப்ளான் எல்லாம் கைமாறியது. (ஹர்ஷல் பட்டேல் 20 ஆவது ஓவரில் 21 ரன்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)

harshal 2

பேட்ஸ்மேன்கள் வித்தியாசமாக யோசித்து துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டாக எங்களால் இன்று அதை செய்ய முடியவில்லை. பேட்டிங்கில் பல தப்புகளை நாங்கள் செய்து விட்டோம். இனி அதில் உள்ள குறைகளை நீக்க வேண்டும் என தோல்விக்கு காரணம் குறித்து கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

The post பஞ்சாப் அணிக்கெதிராக நாங்க பெற்ற இந்த தோல்விக்கு அந்த ஒரு மோசமான ஓவர்தான் காரணம் – விராட் கோலி வேதனை appeared first on Cric Tamil.



from Cric Tamil https://ift.tt/3nACXfL
via IFTTT

Comments